உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தாலுகா அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு  

 தாலுகா அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு  

பண்ருட்டி: பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் மெயின்ரோட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 194 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள 50 பயனாளிகளுக்கு வீட்டுமனை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி பண்ருட்டி தாலுகா அலுவலகத்தை நேற்று மதியம் 1:00 மணிக்கு பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த தாசில்தார் பிரகாஷ், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார், போராட்டம் நடத்தி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து கிராம மக்கள் 3:00 மணிக்கு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை