உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் கோவில்களில் தமிழ் புத்தாண்டு வழிபாடு

விருத்தாசலம் கோவில்களில் தமிழ் புத்தாண்டு வழிபாடு

விருத்தாசலம்; விருத்தாசலம் கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி, பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 5:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு அபிேஷகம், ராஜ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் புத்தாடை அணிந்து விளக்கேற்றிவழிபட்டனர்.மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் முடி காணிக்கை கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர், வேடப்பர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி