உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.10 கூடுதலாக கேட்டு டாஸ்மாக் ஊழியர் அடம்; வீடியோ வைரலால் பரபரப்பு

ரூ.10 கூடுதலாக கேட்டு டாஸ்மாக் ஊழியர் அடம்; வீடியோ வைரலால் பரபரப்பு

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த டாஸ்மாக் கடையில் மதுபிரியரிடம் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக கேட்டு விற்பனையாளர் அடம் பிடிக்கும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பூங்குணத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு, உதவி விற்பனையாளராக பண்ருட்டியை சேர்ந்த முனுசாமி பணிபுரிகிறார். இங்கு, ஒரு மதுபாட்டிலுக்கு ஊழியர்கள் கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக புகார் உள்ளது. இந்நிலையில், மதுபாட்டில் வாங்க வந்த குடிபிரியரிடம், விற்பனையாளர் முனுசாமி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்டு அடம் பிடித்தார். மதுபிரியர் வெகு நேரம் காத்திருந்தும் விற்பனையாளர் மதுபாட்டில் தரவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை