உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

கடலுார் : கடலுார் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க அலுவலகத்தில், டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பட்டினிபோராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்டசெயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் மனோகரன், வேல்முருகன், செந்தில் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயல்தலைவர் கோபால்சாமி வரவேற்றார். கூட்டமைப்பு நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, பாலசுப்ரமணியன், இஷ்டலிங்கம், சிவசண்முகம் உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நல சங்க மாநில செயலாளர் உதயசங்கர், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பிப்.11ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள பட்டினி போராட்டத்திற்கு, கடலுார் மாவட்டத்திலுள்ள நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அல்லிமுத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை