உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / த.வா.க., நிர்வாகிகள் நியமன அறிமுக கூட்டம்

த.வா.க., நிர்வாகிகள் நியமன அறிமுக கூட்டம்

சேத்தியாத்தோப்பு; தமிழக வாழ்வுரிமை கட்சியின் புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தொகுதிக்கான தேர்தல் நிர்வாகிகள் நியமன அறிமுக கூட்டம் நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூரில் த.வா.க., புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தொகுதிக்கான தேர்தல் நிர்வாகிகள் நியமன அறிமுக கூட்டம் நடந்தது. கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சேரலாதன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் கண்ணன், மாநில இளைஞரணி செயலாளர் முருகன், மாநில அமைப்புக்குழு உறுப்பினர்கள் சேகர், தமிழரசன், குமரவேல். மாரிமுத்து, ஜார்ஜ் மார்ட்டின், ஆளவந்தார், குமரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொகுதி தேர்தலுக்கான நிர்வாகிகளை நியமனம் செய்து சான்று வழங்கிய தலைவர் வேல்முருகன் பேசும் போது,'' தி.மு.க., கூட்டணியில் பயணித்து வரும் நாங்கள் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிடும் வகையில் கட்டமைப்பு செய்து கட்சி பணியாற்றுவோம். பண்ருட்டி தொகுதியில் எம்.எல்.ஏ., வாக இருந்து தொகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியுள்ளேன். வரும் சட்டசபை தேர்தலில் மாற்று தொகுதியில் வேட்பாளராக நின்று அங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளையறிந்து நிறைவேற்றுவேன்'' என்று பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் தில்லை, தமிழ்இனியன், பரசுராமன், சிலம்பரசன், பன்னீர்செல்வன், சத்தியமூர்த்தி, கலையழகன், பேரூர் செயலாளர் முத்துராமன், ரஜினிராகேஷ், சமதர்மன், உதயபிரகாஷ், விக்னேஸ், தாடிமுருகன், பாண்டியன், சாகுல், பிரசாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் ப லர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ