பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு
பண்ருட்டி : பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில், கணினி அறிவியல் துறை சார்பில் மாணவர்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.கல்லுாரி புலமுதல்வர் முத்துகுமரன் தலைமை தாங்கினார். கணினிதுறைத் தலைவர் முருகானந்தம் முன்னிலைவகித்தார். கருத்தரங்கில் தேசிய மின்சக்தி பயிற்சிநிறுவன துணை இயக்குனர் அமிர்தவல்லி சிறப்புரையாற்றினார். இதில் கடலுார், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் தங்களது கணினி துறை குறித்து கட்டுரைகள் வழங்கினார். கல்லுாரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.