மேலும் செய்திகள்
ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
28-Oct-2024
விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.மங்கலம்பேட்டை போலீஸ் ஏட்டு வேதவேந்தன் என்பவர், நேற்று முன்தினம் காலை பாஸ்போர்ட் விண்ணப்பித்த நபரின் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றிருந்தார். அப்போது, முல்லை நகரில் பொது இடத்தில் ஆபாசமாக அறுவறுக்கத்தக்க வகையில் பேசிக் கொண்டிருந்த வாலிபரை எச்சரித்தும் செல்லவில்லை.இது குறித்த புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பொட்டா வழக்குப் பதிந்து, முல்லை தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் யோகேந்திரன், 40, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
28-Oct-2024