உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே மொபட் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.புதுச்சத்திரம் அடுத்த சிறுபாளையூரை சேர்ந்தவர் சண்முகம் மகன் மணிகண்டன், 38; சமையல் கலைஞர். இவர் பைக்கில் சிறுபாலையூரில் இருந்து நேற்று புதுச்சத்திரம் சென்றார். வில்லியநல்லூர் சொசைட்டி அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மொபட் மீது எதிர்பாராமல் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை