உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் மாடவீதி விரிவாக்க பணி

கோவில் மாடவீதி விரிவாக்க பணி

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் மாடவீதி சாலை ரூ.1 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையில் மலையாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் உள்ள மாடவீதியை சுற்றி கச்சிராயர்குப்பம், புத்திரன்குப்பம், சொக்கநாதன்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இக்கிராம மக்கள் மாடவீதி வழியாக தங்கள் பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் மாடவீதியில் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். மாடவீதியின் தார்சாலை ஜல்லிகள் ஆங்காங்கே பெயர்ந்து நடக்க முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில், மாடவீதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் மதிப்பில் சாலையை விரிவாக்கம் செய்து, மேம்படுத்தம் பணிகள் துவங்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி