மேலும் செய்திகள்
அரங்கநாத பெருமாள் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி
23-Aug-2025
சிதம்பரம் : சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது . அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் (பொறுப்பு) சீனுவாசன், சரக ஆய்வாளர் சுபாஷினி ஆகியோர் முன்னிலையில் 6 நிரந்தர உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைகழக விளையாட்டு துறை பேராசிரியர் கார்த்திக் தலைமையில், 43 மாணவர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் மூலம் 11 லட்சத்து 87 ஆயிரத்து 655 ரூபாய் காணிக்கை கிடைத்தது. தங்கம் 61 கிராம், வெள்ளி 168 கிராம், வெளிநாட்டு பணங்களும் காணிக்கையாக இருந்தது.
23-Aug-2025