ஐவதுகுடி கல்லுாரியில் டென்னிஸ் பால் போட்டி
விருத்தாசலம்: ஐவதுகுடி பாலிடெக்னிக் கல்லுாரியில் மாநில அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்து டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்க மாவட்ட செயலாளர் ராஜராஜசோழன் அறிக்கை: டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டிகள், வேப்பூர் அடுத்த ஐவதுகுடி ஸ்ரீ ஐயப்பா பாலிடெக்னிக் கல்லுாரியில் வரும் 29, 30ம் தேதிகளில் நடக்கிறது. இப்போட்டிக்கு, மாவட்ட அளவில் ஆண்கள், பெண்கள் அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ள மாணவர்கள் தேர்வில் பங்கேற்று பயனடையுங்கள். மேலும் விபரங்களுக்கு 97870 87377, 88388 69329, 97891 78789 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.