மேலும் செய்திகள்
ஆடுகளம் நீச்சல் போட்டியில் அசத்தும் நிரஞ்சன்
14-Mar-2025
விருத்தாசலம்: மாநில அளவிலான டென்னிஸ் பால் போட்டியில், விருத்தாசலம் வீரர்கள் மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் அமைப்பு சார்பில், மாநில அளவிலான டென்னில் பால் போட்டியை 'உள்ளூர் கிரிக்கெட் யூடியூப்' எனும் அமைப்பு நடத்துகிறது. திருப்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடக்கும் போட்டிகள், வரும் ஏப்ரல் 5 முதல் 13ம் தேதி வரை நடக்கிறது.இதற்கான வீரர்கள் தேர்வு, கடந்த வாரம் திருச்சி ஜே.ஜே., கல்லுாரியில் நடந்தது. இதில், மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் 16 அணிகளை சேர்ந்த குழுவினர், வீரர்களின் தனித்திறன்களை கணித்து, ஏலத்தில் பங்கேற்று தேர்வு செய்தனர்.அதில், விருத்தாசலம் சக்தி நகர், கிறிஸ்துராஜ் மகன் திலீப்ரஞ்சன், ரயில்வே காலனி முருகன் மகன் உதயசூர்யா, எம்.பட்டி, சங்கர் மகன் தீபக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், திலீப் ரஞ்சன், தீபக் ஆகியோர் வி.எம்.ஸ்போர்ட்ஸ் அணிக்கும், உதயகுமார் பியூஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் தேர்வாகினர்.திலீப்ரஞ்சன், தீபக் ஆகியோர் 2019- 20ம் கல்வியாண்டில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், உதயசூர்யா தனியார் பள்ளியிலும் பிளஸ் 2 படித்துள்ளனர். இவர்களை உடற்கல்வி ஆசிரியர் ராஜராஜசோழன் ஊக்கமளித்து, மாநில அளவிலான போட்டிகளுக்கு தயார் செய்தது குறிப்பிடத்தக்கது.மேலும், திலீப் ரஞ்சன் இந்திய அளவிலான டென்னிஸ் பால் வீரர் என்பதால், தேர்வுக்குழுவில் பங்கேற்காமல், நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வான வீரர்கள் மூவரும் வெவ்வேறு கல்லுாரிகளில் பயின்று வருகின்றனர்.
14-Mar-2025