மேலும் செய்திகள்
கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா துவக்கம்
04-Feb-2025
விருத்தாசலம்; முதனை செம்புலிங்க அய்யனார் கோவில் தை பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.விருத்தாசலம் அடுத்த முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் தை பூச திருவிழா விமர்சையாக நடக்கிறது. அதேபோல், நடப்பாண்டு, தை பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 11ம் தேதி தை பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி, அன்று மாலை 4:00 மணியளவில் தீர்த்தவாரி நடக்கிறது.இதில், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர், அருகில் உள்ள சித்தர் ஏரியில் வேல் முழுகுதல் நிகழ்ச்சி நடக்கும். 12ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
04-Feb-2025