உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலில் தவறி விழுந்த சிறுவன் மாயம்

கடலில் தவறி விழுந்த சிறுவன் மாயம்

கடலுார்:கடலுார் துறைமுகம் அருகே கடலில் மீன்பிடிக்கச்சென்ற சிறுவன், படகிலிருந்து தவறி விழுந்து கடலில் மூழ்கி மாயமானார். கடலுார் துறைமுகம் அடுத்த சித்திரைப்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் முகுந்தன்,16. இவர் நேற்று அதிகாலை 3:௦௦மணிக்கு அதே ஊரை சேர்ந்த வாலிபர்களுடன் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றார். திரும்பிவரும் போது முகுந்தன் எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி கடலில் விழுந்து மூழ்கினார். உடன் இருந்தவர்கள் கடலில் குதித்து தேடிப்பார்த்தும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. தகவலறிந்த கடலுார் துறைமுகம் போலீசார் மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். மாலை 5.30மணி வரை சிறுவனை மீட்க முடியவில்லை. இச்சம்பவம் குறித்து கடலுார் துறைமுகம் போலீசார் விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை