உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கயிறு இறுகி சிறுவன் சாவு; விளையாட்டு விபரீதமானது

கயிறு இறுகி சிறுவன் சாவு; விளையாட்டு விபரீதமானது

கடலுார் : கடலுார் முதுநகரில், விளையாடும்போது, கழுத்தில் கயிறு இறுகி சிறுவன் இறந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலுார், முதுநகர் சுத்துக்குளத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களின் மகன் புவன்,11; குடும்பத்தை விட்டு குமார் பிரிந்து சென்ற நிலையில், பரமேஸ்வரி சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.இதனால் சுத்துக்குளத்தில் உள்ள பாட்டி சகுந்தலா வீட்டில் சிறுவன் புவன் தங்கியிருந்து, கடலுாரில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று மாலை வீட்டின் மாடியில் சிறுவன் புவன் நைலான் கயிற்றை கழுத்தில் சுற்றி விளையாடி உள்ளார். அப்போது, எதி்ர்பாராத விதமாக கழுத்தில் கயிறு இறுகிய நிலையில், புவன் சம்பவ இடத்திலயே இறந்தார். கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி