மேலும் செய்திகள்
விருத்தாசலத்தில் தேசிய விளையாட்டு தினம்
04-Sep-2025
ராமானுஜர் செய்தது புரட்சியா மலர்ச்சியா?
25-Aug-2025
சிதம்பரம் : சிதம்பரத்தில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழா நடந்தது. சிவனடியார்கள் கூட்டம் சார்பில், ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவை முன்னிட்டு கடந்த 20ம் தேதி காலை திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் கிழக்கு கோபுரத்தில் இருந்து தேரோடும் நான்கு வீதிகளில் ராஜராஜசோழன் உற்சவர் திருமேனியுடன் வீதியுலா நடந்தது. மாலை திருக்கடையூரில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை முடிந்து, சிதம்பரத்துக்கு அடியார்கள் வந்தனர். நேற்று முன்தினம் சிதம்பரம் தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில், வில் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, ராஜராஜசோழன், நம்பியாண்டார் நம்பி திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது. நடராஜர் கோவில் வெங்கடேச தீட்சிதர், அய்யப்ப தீட்சிதர் முன்னிலை வகித்தனர். சிவலோக திருமடம் தவத்திரு வாதவூரடிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருமுறைகள், நடராஜர் கோவில் சன்னதியில் வைத்து படைக்கப்பட்டு, கிழக்கு கோபுர வாயிலில் இருந்து ராஜராஜசோழன் திருமேனியுடன் திருமுறை வீதியுலா முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர்.
04-Sep-2025
25-Aug-2025