உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் வரும் 28ம் தேதி கலெக்டர் ஆய்வு  

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் வரும் 28ம் தேதி கலெக்டர் ஆய்வு  

கடலுார்: குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 28ம் தேதி 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின் கீழ் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வரும் 28ம் தேதி 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.மேலும் அன்று மாலை அன்று மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை குறிஞ்சிப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட உள்ளது.முதல்வரின் காலை உணவுத் திட்டம், அரசு மருத்துவமனைகள், இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், ரேஷன் கடைகள், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள் தொடர்பாகவும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கள ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !