உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருத்துவ சிகிச்சைக்கு உதவிய கலெக்டரின் மனிதநேயம்

மருத்துவ சிகிச்சைக்கு உதவிய கலெக்டரின் மனிதநேயம்

சிதம்பரம் : சிதம்பரத்தில், வலிப்பு நோயால் பைக்கில் இருந்து விழுந்து துடிதுடித்த கல்லுாரி மாணவரை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.காட்டுமன்னார்கோவில் பகுதியில் மழை பாதிப்பு பயிர்களை, மத்திய குழுவினர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர். அவர்களுடன் கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உடன் சென்றார். ஆய்வு முடிந்த நிலையில், மதியம் 1:00 மணியளவில் சிதம்பரம் பல்கலைகழக விருந்தினர் மாளிகைக்கு மத்திய குழுவினர் சென்றனர்.சிதம்பரம் அருகே சிவபுரி சாலையில் கலெக்டர் கார் சென்றபோது, அங்கு அண்ணாமலை பல்கலைகழக பொறியியல் மாணவர் அரவிந்த் என்பவர், பைக்கில் இருந்து கீழே விழுந்து வலிப்பு நோயால் துடித்தார்.அதை பார்த்த கலெக்டர், கரை நிறுத்திவிட்டு இறங்கி, பாதிக்கப்பட்ட மாணவனை, பாதுகாப்பிற்கு வந்த போலீசார் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.மத்திய குழுவினரை அழைத்து சென்றபோதும், மனித நேயத்துடன் கீழே இறங்கி, மாணவரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய கலெக்டரின் செயலை, அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !