உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வீணாகும் அவலம்

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வீணாகும் அவலம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் 5 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டது. இதன் அருகில் போலீஸ் ஸ்டேஷன், பஸ் நிறுத்தம், தனியார் பள்ளி, மருத்துவமனை என மக்கள் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ளது. இதனால், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பயனுள்ளதாக இருந்தது. அப்பகுதியில் சாலை விரிவாக்க பணி நடந்த போது இடையூறாக இருந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அகற்றினர். அதை எடுத்து சென்று நகராட்சியில் வைத்துள்ளனர். இதற்கு பதிலாக வேறு இடத்தில் பொருத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேப் போன்று, பஸ் நிலையத்தில் பயன்படாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை