மேலும் செய்திகள்
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
16-Jan-2025
கடலுார்: கடலுார் அரசு தலைமை மருத்துவமனை கிளை நுாலகத்தில் திருவள்ளுவர் தின விழா, புதிய புரவலர்கள் அறிமுக விழா, திருக்குறள் தொடர்பான வினாடி விடை நுால் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.வாசகர் வட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் ஜெகதீசன் வரவேற்றார், மூத்த வழக்கறிஞர் சந்திரசேகரன், திருவள்ளுவர் உருவபடத்திற்கு மாலை அணிவித்தார். புதிதாக சேர்ந்த எட்டு புரவலர்களை அறிமுகம் செய்து பாராட்டினர். வாசகர் வட்ட ஆலோசகர் முத்துக்குமரன் தொகுத்த திருக்குறள் தொடர்பான வினாடி வினா நுால் மற்றும் திருக்குறள் ஆய்வு கட்டுரை நுாலை கடலுார் சென்ட்ரல் அரிமா சங்கத்தலைவர் பன்னீர்செல்வம் வெளியிட, சிங்காரம் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.ஓய்வு பெற்ற கலால் துறை இணை ஆணையர் சண்முகசுந்தரம் மற்றும் அருஜோதி, சுந்தரவடிவேல், ஓவியர் மனோகரன், கலைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.வாசகர் வட்ட செயலாளர் பார்த்தீபன் நன்றி கூறினார்.
16-Jan-2025