உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பத்தில் மின் இணைப்பு விபரம் சரி பார்க்கும் பணி துவக்கம்

நெல்லிக்குப்பத்தில் மின் இணைப்பு விபரம் சரி பார்க்கும் பணி துவக்கம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் மின் இணைப்பு விபரம் சரி பார்க்கும் பணி நடக்கிறது.தமிழக அரசு ஒவ்வொரு மின் இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குகிறது.இதற்காக பல கோடி ரூபாய் மானியமாக மின்வாரியத்துக்கு தமிழக அரசு வழங்குகிறது.இந்த செலவை குறைக்க மின்கட்டணம் உயர்வு உட்பட பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒருவர் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் கூட இதுவரை அனைத்து மின் இணைப்புக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைத்தது.ஆனால் புதிய அறிவிப்பின்படி ஒருவரது பெயரில் பல இணைப்புகள் இருந்தால் ஒரு இணைப்புக்கு மட்டுமே 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.மற்ற இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்காது என அறிவித்துள்ளதாக தெரிகிறது.நெல்லிக்குப்பம் கோட்ட மின்வாரியம் சார்பில் ஊழியர்கள் வீடு வீடாக சென்று இதற்கான கணெக்கெடுப்பை செய்து வருகின்றனர்.ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை மின் இணைப்புகள் உள்ளன.அவை யார் பெயரில் உள்ளது என கணக்கெடுத்து வருகின்றனர். ஒரு இணைப்புக்கு மேல் உள்ள இணைப்புக்கு இலவச மின்சாரம் திட்டம் ரத்தாகும் என மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.இதுபற்றி நுகர்வோர் கூறுகையில் தி.மு.க.,தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் மின்சாரம் கணெக்கெடுக்கப்படும் என அறிவித்தனர்.அதை செய்யாமல் ஒரு இணைப்புக்கு மேல் வைத்தள்ளவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசத்தை ரத்து செய்ய முயற்சிக்கிறது. இதனால் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் அதிகம் பாதிக்கபடுவார்கள். இதுபோன்ற நடவடிக்கையை தமிழக அரசு செயல்படுத்தாமல் இருப்பது நல்லது என கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை