இளம்பெண் மாயம்
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.மங்கலம்பேட்டை அடுத்த சின்னப்பரூர் சின்னையன் மகள் நந்தினி, 27; கடந்த ஓராண்டுக்கு முன் தாய், தந்தை இறந்த நிலையில், ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து கொண்டு தங்கை ஜோதிகாவை, 24; பராமரித்து வருகிறார்.கடந்த 18ம் தேதி வீட்டு வேலைகளை ஏன் செய்ய வில்லை என தங்கையை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜோதிகா மறுநாள் காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நந்தினி அளித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, ஜோதிகாவை தேடி வருகின்றனர்.