உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாடக மேடை சீரமைப்பு

நாடக மேடை சீரமைப்பு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே கட்டப்பட்ட 3 மாதத்திலேயே நாடக மேடையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து சேதமானதை 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கும் பணிகள் துவங்கியது.நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் ஊராட்சிக்குட்பட்ட சஞ்சீவிராயன்கோவில் கிராமத்தில் எஸ்.எப்.சி., திட்டத்தின் கீழ் கடந்த 3 மாதங்களுக்கு முன் நாடக மேடை கட்டப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக இரவு நேரங்களில் சிலர் நாடக மேடையில் துாங்குவது வழக்கம்.கடந்த 19ம் தேதி இரவு வழக்கம் போல் சிலர் துாங்கினர். அதிகாலையில் இயற்கை உபாதை கழிக்க சென்று திரும்பிய போது, கட்டடத்தின் மேல்பகுதியில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நாடக மேடையில் தரமில்லாத பணிகளால் தான் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து விட்டதாக பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, நாடக மேடை சீரமைக்கும் பணிக்காக சாரம் கட்டப்பட்டுள்ளது.கட்டடத்தின் மேல் பகுதியை முழுமையாக பெயர்த்து விட்டு, சிமெண்ட் பூச வேண்டும். இல்லையெனில் மற்ற இடங்களிலும் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி