உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திரவுபதி அம்மன் கோவிலில் 28ம் தேதி தீமிதி திருவிழா

திரவுபதி அம்மன் கோவிலில் 28ம் தேதி தீமிதி திருவிழா

புவனகிரி; மேல் புவனகிரி ஆற்றங்கரை வீதி, திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி நேற்று திருக்கல்யாணம் நடந்தது.மேல் புவனகிரி ஆற்றங்கரை வீதி, சுந்தரசாமி மடம் வீதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் 15ம் தேதி முதல் தினசரி சிறப்பு பூஜைகள் மற்றும் பாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் அர்ச்சுணன் வில் வளைத்தல் நடந்தது. நேற்றிரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று இரவு அல்லி திருமணம், நாளை 23ம் தேதி, பாஞ்சாலி சபதம், 24ம் தேதி அர்ச்சுணன் தபசு, 25ம் தேதி பூவெடுப்பு, 26ம் தேதி கிருஷ்ணன் துாது, 27ம் தேதி மாலை அரவான் களபலி, கர்ணன் மோட்சம் நடக்கிறது.வரும் 28ம் தேதி தீமிதி திருவிழாவையொட்டி அன்று காலை 9:00 மணிக்கு படுகளம், திரவுபதி கூந்தல் முடித்தல், மாலை 4:00 மணிக்கு தீமிதி திருவிழாவும், அதனைத் தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. 29ம் தேதி மதியம் மஞ்சள் நீராட்டு, மாலை ஊஞ்சல் உற்சவம், இரவு தர்மர் பட்டாபிேஷகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ