உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் கடையில் பூட்டு உடைத்து திருட்டு

டாஸ்மாக் கடையில் பூட்டு உடைத்து திருட்டு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே டாஸ்மாக் பூட்டை உடைத்து, 8 கேஸ் மதுபானங்களை திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்..பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பத்தில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. நேற்று காலை விற்பனையாளர் குணசேகரன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு அறுந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 8 பாக்ஸ் குவாட்டர் மதுபாட்டில்கள் திருடு போயிருந்தது. அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.திருடிய மதுபானங்கள் அருகில் உள்ள அன்னங்காரன்குப்பம் -குடியிருப்பு கிராமத்திற்கு செல்லும் வனத்துறை சொந்தமான வனப்பகுதியில் வைத்து அருந்தி விட்டு பாட்டில்களை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.பண்ருட்டி டி.எஸ்.பி., ராஜா, முத்தாண்டிக்குப்பம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.இதுகுறித்து விற்பனை யாளர் குணசேகரன் கொடுத்த புகாரில், முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிந்து இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !