மேலும் செய்திகள்
புத்துவாய் அம்மன் கோவிலில் மாசி மக உற்சவம்
14-Mar-2025
கடலுார்; கடலுார், துறைமுகம் உப்பனாற்றில் நடந்த மாசிமக தெப்பல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.மாசிமகத்தையொட்டி, கடலுார் துறைமுகம் சோனங்குப்பம் வெங்கடேச பெருமாள், சிங்காரத்தோப்பு வெள்ளரி அம்மன், அக்கரைகோரி கண்ணனுார் மாரியம்மன், சலங்கைகார தெரு நாகமுத்தாலம்மன், லைன் தெரு ஏழை மகா மாரியம்மன் உள்ளிட்ட உற்சவர் மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் சிங்காரத்தோப்பு கடற்கரையில் எழுந்தருளச் செய்து, தீர்த்தவாரி நடந்தது.இரவு ஐந்து சாமிகளும் மின்விளக்கு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தனித்தனி படகுகளில் துறைமுகம் உப்பனாற்றில் எழுந்தருளச் செய்து, தெப்பல் உற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
14-Mar-2025