பெரியப்பட்டில் தெப்பல் உற்சவம்
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப உற்சவம் நடப்பது வழக்கம்.இந்தாண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி அன்று மாலை 5.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு அப்பகுதியில் உள்ள, பெருமாள் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.இரவு 8.00 மணிக்கு குளத்திலிருந்து சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்தனர்.