மேலும் செய்திகள்
விடையாற்றி உற்சவம்
22-Apr-2025
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் மரகதவல்லி சமேத வீரநாராயணப் பெருமாள் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது. காட்டுமன்னார்கோவில் மரகதவல்லி சமேத வீரநாராயணப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 20ம் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வீதியுலா நடந்தது. முக்கிய விழாவாக நேற்று முன்தினம் கோவிலின் எதிரே உள்ளே வேத புஷ்கரணி குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. ருக்மணி, சத்தியபாமா சமேத ராஜகோபாலன், ஸ்ரீமன் நாதமுனிகள் ஆகிய உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
22-Apr-2025