மேலும் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவில் திருவிழா
24-Apr-2025
விருத்தாசலம் : ஆலடி திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழாவில், ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி திரவுபதி அம்மன் கோவிலில், சித்திரை மாத தீமிதி திருவிழா, கடந்த மாதம் 22ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, சுவாமி வீதியுலா நடந்தது.முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் தீமிதி திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு மேல், உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியதும், தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கி தீ மிதித்தனர். தொடர்ந்து, பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
24-Apr-2025