திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி
குள்ளஞ்சாவடி; கோ.சத்திரம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா இன்று நடக்கிறது.குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரம் திரவுபதி அம்மன் கோவிலில் 86ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இன்று (30ம் தேதி) மாலை 6:00 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது.