மேலும் செய்திகள்
திருநங்கைகளுக்கு தாலி கட்டும் ஐதீக நிகழ்வு
14-Jul-2025
சேத்தியாத்தோப்பு: கூ.தென்பாதி திரவுபதி அம்மன் கோவிலில் 12ம் ஆண்டு தீமிதி நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த கூ.தென்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் 12ம் ஆண்டு தீமிதி விழாவையொட்டி கடந்த 17ம் தேதி கொடியேற்றம் நடந்தது. 18ம் தேதி தர்மர் பிறப்பு, கிருஷ்ணன் பிறப்பு, 19ம் தேதி அம்மன் பிறப்பு நடந்தது. 21ம் தேதி திருக்கல்யாணம், 24ம் தேதி தவசு மரம் ஏறுதல், 25ம் தேதி இரவு அம்மன் பூ எடுத்தல், 26ம் அரவான் களபலி, காளி ஆட்டம் நடந்தது. நேற்று காலை படுகளம், கூந்தல் முடிப்பு நடந்தது. மாலை வீராணம் ஏரிக்கரையில் இருந்து நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள், சக்தி கரகத்துடன் ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து, தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
14-Jul-2025