1.65 லட்சம் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம்
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் உள்ள 1.65 லட்சம் மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளில், மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நேற்று அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. கடலுார் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்த முதல் நாளான நேற்று, ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை உள்ள 1 லட்சத்து 65 ஆயிரம் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்கினர்.