உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  திருக்குறள் திருப்பணி திட்ட நிகழ்ச்சி

 திருக்குறள் திருப்பணி திட்ட நிகழ்ச்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எருமனுார் டாக்டர் இ.கே.சுரேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், திருக்குறள் திருப்பணித் திட்ட நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழும தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலர் இந்துமதி சுரேஷ், தலைமை நிர்வாக அலுவலர் அருண்குமார், புல முதன்மையர் கவிபாண்டியன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சின்னபொண்ணு வரவேற்றார். அலைடு அன்டு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி முதல்வர் ஞானசுந்தரி, அரிமா சங்கம் சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். இந்த நிகழ்ச்சியில், வள்ளுவன் வாய்மொழியில் விஞ்சியிருப்பது இன்புறுத்தலா? அறிவுறுத்தலா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. இதில் நல்லாசிரியர் பாலமுருகன் நடுவராக இருந்தார். கல்லுாரி துணை முதல்வர் ஜேசுதாஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ