| ADDED : டிச 25, 2025 06:00 AM
கடலுார்: கடலுார் அரசு பெண்கள் ஐ.டி.ஐ., மற்றும் மாவட்ட தமிழ்சங்கம் ஆகியன சார்பில் திருக்குறள் திருப்பணித் திட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. கடலுார் அரசு பெண்கள் ஐ.டி.ஐ., யில் நடந்த முகாமில், ஐ.டி.ஐ., முதல்வர் ஆதவ புருஷோத் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சங்கர் வரவேற்றார். மாவட்ட தமிழ் சங்க துணை தலைவர் பாஸ்கரன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சுந்தரபாண்டியன் வாழ்த்தி பேசினர். சட்ட ஆலோசகர் திருமார்பன் திருக்குறளில் சமூக நீதி என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியை திருக்குறள் திருப்பணித்திட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜா தொகுத்து வழங்கினார். கவிநிலா நன்றி கூறினார்.