திருக்குறள் கருத்தரங்கம்
கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி பெண்கள் கலைக்கல்லுாரியில் திருக்குறள் கருத்தரங்கம், திருக்குறள் வினாடிவினா நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் நிர்மலா தலைமை தாங்கினார். தமிழ் துறைத்தலைவர் கீதா வரவேற்றார். உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பேராசிரியர் வெண்ணிலா, திருக்குறள் வினாடிவினா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகமும், சான்றிதழ் வழங்கப்பட்டது. திருக்குறள் பேரவை தலைவர், பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். கல்லுாரி செயலர் விஜயகுமார் வாழ்த்துரை வழங்கினார். கல்லுாரி பேராசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.பேராசிரியர் தமிழ்மொழி நன்றி கூறினார்.