உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்குறள் கருத்தரங்கம் 

திருக்குறள் கருத்தரங்கம் 

கடலுார் : பண்ருட்டி அடுத்த மருங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் வரவேற்றார். திருக்குறள் ஒப்புவித்தல், முற்றோதல், திருக்குறள் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் ஜெகரட்சகன், முருகவேல் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். உலக திருக்குறள் பேரவையின் மாவட்ட தலைவர் பாஸ்கரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம், சான்றிதழ் வழங்கி பாராட்டி னார் . ஆசிரியர் முருகவேல் நன்றி கூறி னார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை