தொரப்பாடி அ.தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
பண்ருட்டி, : பண்ருட்டி அடுத்த தொரப்பாடி அ.தி.மு.க., சார்பில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சம்பத் அன்னதானம் மற்றும் 2,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில், மாவட்ட அவைத் தலைவர் குமார், பண்ருட்டி நகர செயலாளர் மோகன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சேகர், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, சிவா, நாகபூஷணம், தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பட்டாம்பாக்கம் பேரூர் செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட இணை செயலாளர் கௌரி பாண்டியன், தொரப்பாடி பேரூர் செயலாளர் சுரேஷ், அவைத்தலைவர் சுந்தரம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முருகன், சிவசந்திரன், பண்ருட்டி நகர பேரவை செயலாளர் செல்வம், மாவட்ட விவசாயி அணி தலைவர் தனபால் பங்கேற்றனர்.