உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மொபைல் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் பண்ருட்டி அருகே பரபரப்பு

மொபைல் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் பண்ருட்டி அருகே பரபரப்பு

பண்ருட்டி : பண்ருட்டி அருகே தனியார் மொபைல்போன் டவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரபு, 53; இவரது தம்பி பிரகாஷ், 51; இருவருக்கும் இடையே பூர்வீக நிலம் பிரிப்பது குறித்து பிரச்னை இருந்து வந்தது.நேற்று காலை 11:00 மணியளவில் எம்.புதுப்பாளையம் சுடுகாட்டு பாதை செல்லும் வழியில் உள்ள 100 அடி உயரமுள்ள தனியார் மொபைல் போன் டவரில் ஏறிய பிரபு, 50 அடி உயரத்தில் நின்று கொண்டு, பிரச்னையை தீர்த்து வைக்க கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.தகவலறிந்த பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரபுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், 12:30 மணிக்கு கீழே இறங்கி வந்தவரை விசாரணைக்காக கவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை