உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அச்சுறுத்தும் செங்குளவி: வாகன ஓட்டிகள் அச்சம் 

அச்சுறுத்தும் செங்குளவி: வாகன ஓட்டிகள் அச்சம் 

பெண்ணாடம்; பெண்ணாடம் அருகே அச்சுறுத்தும் செங்குளவி கூட்டை அழிக்க வேண்டு மென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்ணாடம் அடுத்த சுமைதாங்கி - பெ.பூவனுார் சாலையை பயன்படுத்தி 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அரியராவி அருகே சாலையோர பனை மரத்தில் 2 அடி நீளம், 2 அடி அகலத்திற்கு செங்குளவிகள் கூடு கட்டியிருக்கின்றன. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் இப்பகுதியை கடந்து செல்ல அச்சம் அடைகின்றனர். மேலும், அவ்வப்போது காற்று பலமாக வீசும்போது செங்குளவி பறப்பதால் இவ்வழியே யாரும் செல்ல முடியாமல் தி.அகரம் சென்று அங்கிருந்து ஓ.கீரனுார், பெ.பூவனுார், காரையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, செங்குளவி கூட்டை அழிக்க தீயணைப்பு நிலைய வீரர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ