உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., மாவட்ட செயலர் மீது அவதுாறு பரப்பிய மூவர் கைது

பா.ம.க., மாவட்ட செயலர் மீது அவதுாறு பரப்பிய மூவர் கைது

விருத்தாசலம் : பா.ம.க., மாவட்ட செயலர் மீது அவரதுாறு பரப்பிய மூவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் திருவள்ளுவர் நகர், திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் கார்த்திகேயன். பா.ம.க., மேற்கு மாவட்ட செயலர்.இவர் நேற்று முன்தினம் விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தார். அதில், மாவீரன் ஸ்ரீ கும்பகோணம் என்ற முகநுால் ஐ.டி.,யில் அடையாளம் தெரியாத நபர், என்னைப்பற்றி தவறான செய்திகளை பரப்பி, கொலை மிரட்டல் விடுத்து பல பதிவுகள் வந்தன. மேலும் கடந்த (15ம் தேதி) கனிம வளத்தை கொள்ளையடிக்கும் பா.ம.க., மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் என்றும், மேலும் தரக்குறைவான முறையில் பதிவுகள் வந்தன. இதனால் எனது உயிருக் கும், நற்பெயருக்கும், மாவட்ட செயலாளர் பதவிக்கும் கலங்கம் ஏற்பட்டுள்ளது. என மனு அளித்திருந்தார்.அதன்பேரில், விருத்தா சலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சின்ன கண்டியங்குப்பம் கிராமத் தைச் சேர்ந்த செல்வக்குமார், ராஜ்குமார், ஜெயகுரு, 36; எருமனுார் கிராமத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி, 27; கும்பகோணம் அடுத்த அம்மன்குடியைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் சேர்ந்து முகநுாலில் அவதுாறு பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, ஜெயகுரு, விநாயகமூர்த்தி, ஸ்ரீதர் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், மேலும் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !