மேலும் செய்திகள்
ஹான்ஸ் விற்ற இருவர் கைது
23-Nov-2024
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மாட்டு வண்டியில் ஆற்றுமணல் கடத்திய ஏழு பேர் மீது வழக்குப் பதிந்த போலீசார், மூவரை கைது செய்தனர்.கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று சி.கீரனுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அதேப் பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம், 55; மாயவேல், 52; செல்வராஜ், 52; சீனுவாசன், கணேசன், பழனிவேல், வேலு ஆகியோர் வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திச் சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, வைத்தியலிங்கம், மாயவேல், செல்வராஜ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். தப்பியோடிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.
23-Nov-2024