உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கஞ்சா பதுக்கிய மூவர் கைது

 கஞ்சா பதுக்கிய மூவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர சோத னையில் ஈடுபட்டனர். அதன்படி, பாசிகுளம் சுடுகாடு செல்லும் வழியில் உள்ள முந்திரி தோப்பில் சந்தேகத்திற்கிடமாக அமர்ந்திருந்த நபர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அ தில் இருவர் தப்பியோடிய நிலையில் மூவர் பிடிபட்டனர். அவர்கள், அதே பகுதியை சேர்ந்த பிச்சை பிள்ளை மகன் செல்வகுமார், 26; ரவி மகன் ராஜ்குமார்,22; பால்ராஜ் மகன் கேப் டன், 18; என்பது தெரிந்தது. இது தொடர்பாக கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி