உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபருக்கு கத்திகுத்து; மூன்று பேர் கைது

வாலிபருக்கு கத்திகுத்து; மூன்று பேர் கைது

சேத்தியாத்தோப்பு ; சேத்தியாத்தோப்பு அருகே பஸ்சை வழிமறித்து, வாலிபரை கத்தியால் குத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீமுஷ்ணம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்வக்குமார் மகன் பிரேம்குமார், 20; இவர் நேற்று முன்தினம் மாலை, தனது நண்பர்களுடன் சேத்தியாத்தோப்பில் இருந்து வடலுாருக்கு அரசு பஸ்சில் சென்றார்.பின்னலுார் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது இருசக்கர வாகனங்களில் வந்த வீரமுடையாநத்தத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன் சுவிளஞ்சிராஜன், 23; செல்வராசு மகன் நவீன்குமார், 24; சென்னிநத்தத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராகுல், 18; உள்ளிட்ட 5 பேர், பஸ்சை நிறுத்தி, பிரேம்குமாரை கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.காயமடைந்த ராகுல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து பிரேம்குமார் கொடுத்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து, சுவிளஞ்சிராஜன், நவீன்குமார், ராகுல் ஆகியோரை கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ