சொக்கநாதர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் வரும் 10ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு இன்று (8ம் தேதி) காலை 10:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை நடக்கிறது.மாலை 5:00 மணிக்கு அங்குரார்பணம், பிரவேச பலி, ரக் ஷாபந்தனம், முதல் கால யாக சாலை பூஜை நடக்கிறது.நாளை 9ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு 3ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.10ம் தேதி காலை 5:00 மணிக்கு 4ம் கால யாக சாலை பூஜை, விசேஷ சாந்தி, தத்துவார்ச்சனை, நாடி சந்தனம், 8:45 மணிக்கு மகா தீபாராதனை, 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.