நாளை வள்ளலார் பிறந்த நாள் விழா
வடலூர்: வடலூரில் நாளை வள்ளலார் பிறந்த நாள் விழா நடக்கிறது. வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும், தருமச்சாலை மூலம் சன்மார்க்க கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இங்கு நாளை 5ம் தேதி வள்ளலார் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. அதனையொட்டி, சத்திய ஞான சபையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் நாளை காலை 9:00 மணிக்கு, சன்மார்க்க கொடி உயர்த்தப்படுகிறது. தொடர்ந்து திருஅருட்பா பாராயணம் ஓதுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. வள்ளலார் பிறந்த நாள் விழாவையொட்டி, சத்திய ஞானசபை வளாகம், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.