வியாபாரிகள் சங்க மாவட்ட செயற்குழு
கடலுார் ; வியாபாரிகள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது.மாநில துணைத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் அருள்ஜோதி வரவேற்றார். கூட்டத்தில், மாநில இளைஞரணித் தலைவர் ஜெயபாலன், கொள்கை பரப்பு செயலாளர் பிரகாஷ், சுரேஷ், மாவட்டத் தலைவர் ரவிக்குமார், தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் சுப்புராயன், கவுன்சிலர் கர்ணன், பொதுச் செயலாளர் காத்தப்பன், ஆலோசகர் சுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.இளைஞரணி செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.