பாரம்பரிய சுவைமிக்கது ஏ.கே.எஸ்., மசாலா
குறிஞ்சிப்பாடி ஏ.கே.எஸ்., மசாலா நிறுவனத்தில் அனைத்து பொருட்களும் தரமாக விற்பனை செய்யப்படுகிறது என, அதன் உரிமையாளர் அறிவுக்கரசு கூறினார். இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் பஸ் நிறுத்தம் அருகில் 31 ஆண்டுகளாக இயங்கி வருகிறது ஏ.கே.எஸ். மசாலா நிறுவனம். அனைத்து மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளின் விளைபொருட்களை இந்நிறுவனம் நேரடியாக சென்று கொள்முதல் செய்கிறது. இவைகள், நவீன மில்லில் சுத்தம் செய்து அதன் தன்மை மாறாமல் அரைத்து மசாலா தயாரித்து, பேக்கிங் செய்து மக்களிடம் எளிதாக சேரும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தில் மஞ்சள் துாள், தனி மிளகாய் துாள், மல்லித்துாள், குழம்பு மிளகாய்த்துாள் மற்றும் அனைத்து வகை மசாலா பொருட்களும் கிடைக்கும். பாரம்பரிய சுவை மிக்க மசாலா பொருட்கள் புதிய வகை பேக்கிங்கில் 5 ரூபாய், 10 ரூபாய் பாக்கெட், 50 கிராம், 200 கிராம், அரை கிலோ மற்றும் ஒரு கிலோ பேக்கிங்கில் கிடைக்கிறது. மேலும், விவரங்களுக்கு 6383636364 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.