உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்து காவல் நிலையம்; ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை

போக்குவரத்து காவல் நிலையம்; ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை

கடலுார்; கடலுார் போக்குவரத்து காவல் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாநகர பகுதியில் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கும், அபே ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே பயணிகளை ஏற்றிச்செல்வதில் பிரச்னை உள்ளது. அபே ஆட்டோ டிரைவர்கள் விதிகளை மீறி அதிகளவு பயணிகளை ஏற்றிச்செல்வதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஷேர் ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அபே ஆட்டோ டிரைவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பயணிகள் ஏற்றக் கூடாது என அறிவுறுத்திய போக்குவரத்து போலீசார், விதிகளை மீறிய டிரைவர்கள் மீது வழக்குப் பதிந்தனர். இதானல் ஆத்திரமடைந்த அபே ஆட்டோ டிரைவர்கள் நேற்று காலை கடலுார் போக்குவரத்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை