உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பள்ளியில் பயிற்சி முகாம்

அரசு பள்ளியில் பயிற்சி முகாம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு கிளை சார்பில், நடுநிலைப் பள்ளி ஜே.ஆர்.சி., ஆலோசகர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தலைமை தாங்கினார். ஜே.ஆர்.சி., கவுரவ செயலர் மணிகண்டராஜன், தலைமை ஆசிரியர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் கனகராஜ் வரவேற்றார். சி.இ.ஓ., எல்லப்பன், டி.இ.ஓ.,துரைப்பாண்டியன் , தனியார் பள்ளி டி.இ.ஓ., மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். கருத்தாளர்கள் விமல்ரா ஜ், கோவிந்தராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை