உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தணிக்கையாளருக்கு பயிற்சி முகாம்

தணிக்கையாளருக்கு பயிற்சி முகாம்

மந்தாரக்குப்பம் : அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட அரசு தணிக்கையாளர்களுக்கான பயிற்சி முகாம் கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டரங்கில் நடந்தது.முகாமை தணிக்கைத்துறை உதவி இயக்குனர் சக்தி கிருஷ்ண ராஜ் துவக்கி வைத்தார். தணிக்கை ஆய்வாளர் ராஜன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி வரவேற்றார்.முகாமில் தணிக்கையாளருக்கு உள்ளாட்சி துறை, கூட்டுறவுத் துறையில் வரவு செலவு கணக்குகளை சரி பார்த்தல், பராமரிக்கப்படும் கணக்குகளை எவ்வாறு தணிக்கை செய்வது, குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் கண்ணன், தணிக்கை பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி